வீட்டில் குழந்தைகள் நோய் வாய்ப்பட்டால் செய்வதறியாமல் திகைப்போம். முதலில் கைமருந்து கொடுப்போம். அதில் குணமாக வில்லை எனத் தெரிந்ததும் மருத்துவரின் உதவியை நாடுவோம். அவரது பராமரிப்பில் குழந்தை நலம் பெறும் என்ற நம்பிக்கையில் செயல்படுவோம். இந்நிலையில் மருத்துவருக்கு ஆலோசனை ஏதும் சொல்ல மாட்டோம். இதைப் போலவே பாவத்தின் காரணமாக நம் ஆத்மாவும் இப்போது நோய்க்கு ஆளாகி விட்டது. குழந்தைக்கு கைமருந்து கொடுத்தது போல, நமக்கு நாமே பாவங்களைப் போக்க முயற்சித்தால் பாதாளத்தில் விழ நேரிடும். எனவே மருத்துவராகிய ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நிம்மதியுடன் வாழ்வோம்.
கட்டளைக்கு கீழ்ப்படிவோம்