ஆப்கானுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் விநியோகம்

காபூல்:


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதநேய அடிப்படையில் உதவும் வகையில் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பாராசிடமால்மருந்துகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்கா, இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 3 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மற்றும் 70 ஆயிரம் பாராசிட்டமால் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை காபூலில் உள்ள தூதரக அலுவலகத்தில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் வினாய்குமார், அந்நாட்டு பொது சுகாதாரத்துறை அமைச்சர் பெரோசுதீனிடம் வழங்கினார்.