உலகம் திருந்த வழி

கொடிய குற்றம் செய்தவனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. இதனால் உலகம் திருந்தி விட்டதா என்றால் இல்லையே! மேலும் குற்றங்கள் உலகில் பெருகத் தான் செய்கின்றன.
குற்றத்தைக் கட்டுப்படுத்த கல்வி ஒன்றே சிறந்த வழி. படிக்காமல் ஊர் சுற்றுபவர்களே குற்றங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலோர் படிக்காதவர்களே! குழந்தைப் பருவத்தில் ஒருவரை எப்படி பழக்குகிறோமோ அதைப் பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும்.
'நல்லவழிகளில் பிள்ளைகளை வழிநடத்து; முதிர்ந்த வயதிலும் அவன் அதை விடாதிருப்பான்' என்பது உண்மை தானே