இறைவனை வணங்குவோரை கேலிப் பார்வை பார்க்கிறது உலகம்.
“இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், கடவுளாவது ஒன்றாவது” என நினைப்பவர்கள் பலர் உள்ளனர். அது மட்டுமல்ல... இறைவனை தொழுவதைக் கண்டால், “இப்படியும் ஒரு பைத்தியக்காரன் இருக்கிறானே” என கேலியாகச் சிரிக்கின்றனர். ஆனால் இறை வணக்கத்தை மட்டும் விட்டு விடாதே. அனைத்தையும் நிகழ்த்துபவன் இறைவனே என்கிறது இஸ்லாம்.
''உன்னைப் பைத்தியக்காரன் என்று மக்கள் சொல்லும் அளவுக்கு இறைவன் திருநாமத்தைத் துதித்துக் கொண்டே இரு''என்கிறார் நபிகள் நாயகம். பிறகென்ன! வீணர்களின் வெட்டிப் பேச்சை விட்டு விட வேண்டியது தான். மனிதனைக் காப்பாற்றுவதில் இறை நினைவை விட சிறந்தது வேறில்லை. ஒவ்வொரு கல்லையும், மரத்தையும் நெருங்கும் போது இறைவனின் திருநாமத்தைச் சொல்லுங்கள். இறைவனை நினைப்பவனே உயிருள்ளவன். நினைக்காதவன் மரணித்தவன் போலாவான்.
எனவே எப்போதும் இறைசிந்தனையுடன் வாழ்வோம். நல்வழியில் நடந்து நன்மை பெறுவோம்.